மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானம் தொடர்பில் விரைந்து முடிவெடுப்போம்!



மட்டக்களப்பு நகரத்திக்கும், நகரத்தின் பிரதான நான்கு பாடசாலைகளுக்கும் இருக்கும் ஒரே விளையாட்டு மைதானம் வெபர்.

துரதிஷ்டவசமாக இந்த விளையாட்டு மைதானத்தை காலை நேரத்தில் பயன்படுத்தும் முறையாக நிலை..

காரணம் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் பொது ஒலிபெருக்கிகளை பயன்படுத்த முடியாததன் காரணமாக அனைத்து நிகழ்வுகளும் மதிய நேரத்திற்க்கு பின் தான் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது.

அதற்க்கு மாநகர சபை முன்வைக்கும் நியாயமான காரணம் நீதிமன்ற நடவடிக்கைக்கு ஒலி இடையுறு ஏற்படுவதை தவிர்க்கும் பொருட் டு அதை அவர்கள் கடை பிடிப்பதாக கூறுக்கிறார்கள்.

உண்மையில் இன்றைய கால கட்டத்திலும் பாடசாலை மாணவர்கள் கற்றல் உடன் விளையாட்டை அவர்களுக்கு செய்து கொடுக்க வேண்டியது பாடசாலையில் கடமை.

#St/#Michaels college, st/Central college, Vincent Highs girls school, St/Cecil's convent போன்ற பிரபல பாடசாலைக்கு என்று தனியான மைதானம் இல்லாத நிலையில் இந்த வெபர்மைதானம் தான் குறித்த பாடசாலைக்கு மைதானமாக இருக்கிற து.

அது மட்டுமல்லாது மட்டக்களப்பு நகத்தின் மத்தியில் இந்த மைதானம் இருப்பதால் எதாவது நிகழ்ச்சி ஏற்பாடு செய்தால் அனைவருக்கும் இலகுவாக உள் மற்றும் வெளி இடங்களில் இருந்து வரும் மக்களுக்கும் அசவுகரியமாக இல்லமால் இலகுவாக பங்குபற்றி கொள்ள இருக்கும்.

இவ்வாறு 5000 க்கு மேற்பட்ட பாடசாலைமாணவர்களுக்கும் மற்றும் மக்களுக்கும் தேவை உடைய மைதானம் குறித்த நேரத்தில் மாத்திரம் இயங்கலாம் என்று இருப்பது ஒரு கலவை உடைய விடையம் ஆகு‌ம்.

மட்டக்களப்பு மாவட்ட நிர்வாக நடவடிக்கைகளை மேற் கொள்ளும் கச்சேரி புதிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது போன்று
நீதிமன்ற நடவடிக்கை தடைகள் இன்றி நடைபெற அதையும் வேறு இடத்திற்கு மாற்ற விரைந்து செயல்படுத்தினால் சிறந்த நடவடிக்கை ஆக இருக்கும்.
                           
#காலம் தாழ்த்தாமல் எதிர்கால சந்ததியின் நலனை கருத்தில் எடுத்து நீதிமன்ற நடவடிக்கைகளை வேறு இடத்துக்கு விரைவாக மாற்ற உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தகவல்
N. நிரு

புதியது பழையவை