மட்டக்களப்பில் பேருந்து தரிப்பிட கட்டிடத்திற்கு அருகில் மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம்!



மட்டக்களப்பில் பேருந்து தரிப்பிட கட்டிடத்திற்கு அருகில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு - கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பாலமீன்மடு ஆரம்ப வைத்தியசாலை வளாகத்திற்கு அருகில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் இன்று (12-08-2023) பிற்பகல் இடம் பெற்றுள்ளதாக பெகாக்குவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பொலிசார் விசாரணை
இவர் மைக்கல் என்று அழைக்கப்படுவதாகவும் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இந்த பகுதி பொது கட்டிடங்களான சந்தை மற்றும் பஸ்தரிப்பிட கட்டிடங்களில் தங்கி வாழ்ந்து வருதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் தொடர்பான மேலதிக விபரங்கள் தெரியவில்லை பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை