மின்கம்பத்துடன் மோதிய தேர் - மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு!பதுளை நமுனுகுல பூட்டா வத்தையில் இடம்பெற்ற வருடாந்த தேர் ஊர்வலத்தின் போது உயர் அழுத்த மின்கம்பியில் தேர் வண்டி மோதியதில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் ந (23 -08-2023) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவத்தில் மூவர் காயமடைந்து பசறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நமுக்குள காவல்துறையினர் தெரிவித்தனர்.


 (23-08-2023) ஆரம்பமான ரதம் பெரஹெரா நேற்று (24ம் திகதி) காலை வரை இடம்பெற்றதுடன், தேரை கோவிலுக்கு எடுத்துச் செல்லும்போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் டி.செல்வகுமார் (30), பி.ரமேஷ் (42) ஆகிய இருவரும் உயிரிழந்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதியது பழையவை