இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த வருடம் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை 48 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் ஒழிப்பு வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது.

15 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட அதிகமானோர் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகின்றமை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாட்டில் இதுவரை நான்காயிரத்து நூறு எச்.ஐ.வி தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக எய்ட்ஸ் ஒழிப்பு வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது.
புதியது பழையவை