இன்று (03-08-2023)முதல் நீர் கட்டணங்கள் திருத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.
நீர் கட்டணங்கள் சுமார் 30% முதல் 50% வரை அதிகரிக்கப்படும் என்று தேசிய நீர்வழங்கல் அபிவிருத்தி சபையின் பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், கட்டண திருத்தத்தால் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் பாதிக்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.