ஆணழகன் போட்டியில் சாதித்த மன்னார் இளைஞர்கள்!யாழ்மாவட்ட உடற்கட்டமைப்பு மற்றும் விருத்தி சங்கத்தினால் வடமாகாண ரீதியாக இடம் பெற்ற ஆணழகன்களை தெரிவு செய்யும் போட்டியில் மன்னார் மாவட்ட இளைஞர்கள் இரு பிரிவுகளில் முதல் இடத்தை தமதாக்கி கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபத்தில் நேற்று(19 08-2023) உடற்கட்டமைப்பு மற்றும் ஆணழகன்களை தெரிவு செய்யும் போட்டி இடம்பெற்றது.

இப்போட்டியில் 65 கிலோ எடை பிரிவில் ஜெசீலன் முதலாம் இடத்தையும் 60 கிலோ பிரிவில் ஜென்சன் முதலாம் இடத்தையும் 70 கிலோ பிரிவில் லியோன் மூன்றாம் இடத்தையும் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.


மாகாண ரீதியாக இரண்டு முதல் இடங்களையும் ஒரு மூன்றாவது இடத்தையும் பெற்று மூன்றாவது இடத்தை மன்னார் அணியினர் பெற்றுக்கொண்டுள்ளனர்.
புதியது பழையவை