இராயாங்க அமைச்சர் - ச.வியாழேந்திரனின் அதிரடி நடவடிக்கை


மாட்டக்களப்பில் எத்தனையோ ஏழை மக்கள் இன்னும் ஒரு வீட்டில் இரண்டு , மூன்று குடும்பங்கள் வசிக்கிறார்கள்.

மறுபுறத்தில் அரச வீட்டுத் திட்டத்தை அரச காணியுடன் பெற்ற முதல் நாளில் இருந்து இன்று வரை பாவிக்காமல் பலர் மூடி வைத்துள்ளனர்.

உதாரணமாக சத்துருக்கொண்டான் வீட்டுத் திட்டத்தில் ஒரு இடத்தில் மாத்திரம் 66 வீடுகள் பூட்டப்பட்ட நிலையில் உள்ளன.

அத்தகைய வீடுகளில் சில வீடுகளில் சட்ட விரோதமான செயல்களும் இடம் பெறுகின்றன .

பக்கத்தில் உள்ளவர்களுக்கு அது மிகவும் அசௌகரியத்தையும் , பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.

ஒருவர் அவ்வாறான ஒரு வீட்டில் தற்கொலையும் செய்துள்ளார் . இனம் தெரியாதவர்கள் இரவு நேரங்களில் வந்து செல்வதாகவும் பக்கத்தில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

மாவட்டம் முழுவதும் இவ்வாறான அரச வீட்டுத் திட்டங்கள் நூற்றுக்கணக்காக உள்ளன. இவ்வாறான அரச வீட்டுத் திட்டங்களை பல உண்மைக்குப் புறம்பான செய்திகளை வழங்கி பல வசதி படைத்தவர்களும் பெற்றுள்ளனர்.

ஆகவே பாவனைக்கு உட்படுத்தாத இவ் அரச வீட்டுத் திட்டங்களை பெற்று , வீடற்ற ஏழைகளுக்கு வழங்க முதற்கட்டமாக மண்முனை வடக்கு , ஏறாவூர் பற்றில் முடிவு எடுத்து, அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கும் பணிப்புரையும் விடுத்துள்ளேன்.
புதியது பழையவை