ஆயுர்வேத சிகிச்சைக்காக இந்தியா வர விரும்புவோருக்கு - விசேட விசா வழங்கும் திட்டம்!



ஆயுர்வேத சிகிச்சைக்காக இந்தியா வர விரும்புவோருக்கு 'ஆயுஷ் விசா' என்ற புதிய வகை விசா வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்திய மருத்துவ முறைகளின் கீழ் சிகிச்சை பெறும் வெளிநாட்டினருக்கு மட்டுமே ஆயுஷ் விசா வழங்கப்படுகிறது.

ஆயுர்வேதம், யோகா, மற்ற பாரம்பரிய சிகிச்சை முறைகள், பாரம்பரிய மருத்துவம் போன்றவற்றில் ஆர்வமுள்ளவர்கள் இந்தியாவுக்கு வர ஆயுஷ் விசாவின் சேவையைப் பெறலாம்.

இந்தியாவில் குறிப்பாக தென்னிந்திய மாநிலங்கள் ஆயுஷ் விசா முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் நிறைய இலாபம் ஈட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரபு, ஐரோப்பிய, ரஷ்ய, உக்ரைன், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து ஏராளமானோர் ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரளாவுக்கு வருகின்றனர்.


இந்த நிலையில், புதிய ஆயுஷ் விசா நடைமுறைக்கு வருவதால், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதியது பழையவை