மீன்பிடிக்கச்சென்ற மூன்று மீனவர்கள் மின்னல் தாக்கி உயிரிழப்பு!மீன்பிடிக்கச்சென்றவேளை மூன்று மீனவர்கள் மின்னல் தாக்கி உயிரிழந்த துயர சம்பவம் பதிவாகியுள்ளது.

மிஹிந்தலை தம்மன்னாவ வாவியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

44 மற்றும் 46 வயதுக்குட்பட்ட மூன்று மீனவர்களே உயிரிழந்தவர்களாவர்.


நேற்று (11-08-2023) மாலை ஏழு பேர் கொண்ட குழு தம்மன்னாவ வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் தம்மன்னாவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
புதியது பழையவை