மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களை தடுப்பது யார் என்பது தெரியாதுமட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஊடகவியாளர்கள் புறக்கணிக்கப்பட்ட விடயம் தொடர்பில் தனக்கு எவ்வித தகவலும் தெரியாது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நாளைய தினம்(31.08.2023) இடம்பெறவுள்ள அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஊடகவியலாளர்கள் புறக்கணிக்கப்பட்டதாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருந்தது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஊடகவியலாளர்களுக்கு தடையை விதிக்கும்படி என் சார்ந்த எவரும் கூறவில்லை.

குறிப்பாக மாவட்ட அரச திணைக்கள அதிகாரிகளிடம் நாங்கள் எவ்வித கோரிக்கையையும் முன்வைக்கவில்லை'' என தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை