ஜனாதிபதி ரணில் பிறப்பித்துள்ள உத்தரவு!நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய படையினர் அனைவரையும் அழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த விடயத்தை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று காலை (08.08.2023) நாடாளுமன்றில் வைத்து சற்றுமுன் அறிவித்துள்ளார்.

நாற்பதாவது அதிகாரம் கொண்ட பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பொதுமக்களின் பாதுகாப்பினை கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை