பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களுக்கு - கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நிரந்தர நியமனம்பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களை கிழக்கு மாகாண அரச சேவைக்கு இணைத்துக்கொள்வதற்கான நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (29 -08-2023)
மாலை அம்பாறை டி.எஸ்.சேனநாயக்க தேசிய பாடசாலையின் பிரதான கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த நியமனக்கடிதம் வழங்கும் வைபவத்தில் அதிதிகளாக கிழக்கு மாகாண சபையின் ஆளுநர் எம்.செந்தில் தொண்டமான், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம் அதாஉல்லா, டபிள்யூ.வீரசிங்க, விமலவீர திஸாநாயக்க, திலக் ராஜபக்ஸ, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம, கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், அம்பாறை மாவட்ட பல்நோக்கு அபிவிருத்தி செயலணித் திணைக்கள அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

நாடளாவிய ரீதியான முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவின் சுபீட்சத்தின் நோக்கு எனும் தொனிப்பொருளில் நாட்டிலுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர், யுவதிகளுக்கு ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சித்திட்டத்தில் 35,000 பயிலுநர்கள் முதற்கட்டமாக தெரிவாகி இருந்ததுடன், பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர் பயிலுனர் நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைப் பிரகடனத்திற்கமைய 'வறுமையற்ற இலங்கை' யைக் கட்டியெழுப்பும் எண்ணக்கருவினை செயற்படுத்துவதற்காக பல்நோக்கு அபிவிருத்தி செயலணித்திணைக்களம் இஸ்தாபிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தது.

பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களாக பலதரப்பட்ட காரியாலயங்களில் பணிக்கு அமர்த்தப்பட்ட பின்னர் பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களின் தகைமைகள் உறுதிப்படுத்தப்பட்டு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.புதியது பழையவை