விசாரணைக்காக அழைக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நினைவேந்தல் மட்டக்களப்பில் 33வது ஆண்டு அனுஷ்டிப்பு!மட்டக்களப்பு - வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் 33ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வு இன்று (05.09.2023) வந்தாறுமூலை பல்கலைக்கழகவளாக முன்றலில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியம் இணைந்து ஏற்பாடு செய்த நினைவேந்தலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

நாட்டை உலுக்கப்போகும் அறிவிப்பு: பிள்ளையானின் முன்னாள் பேச்சாளர் குறித்து லண்டன் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி
நாட்டை உலுக்கப்போகும் அறிவிப்பு: பிள்ளையானின் முன்னாள் பேச்சாளர் குறித்து லண்டன் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி

இதன்போது சர்வதேச நீதிப்பொறிமுறையின் கீழ் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியைப்பெற்றுக்கொடுக்க வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய அமைதி போராட்டம்
வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரில் முதல் பெயரே இலங்கை நீதிதேவதை தான், எமது உறவுகள் எமக்கு வேண்டும், எமக்கு சர்வதேச விசாரணை வேண்டும், எங்கே எங்கே உறவுகள் எங்கே, இன்னும் எத்தனை நாட்கள் நாங்கள் நீதிக்காக போராட வேண்டும்?, எமக்கு நீதியான விசாரணை வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து காணமால் ஆக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலியும் செலுத்தினர்.

1990ஆம் ஆண்டு நடுப்பகுதியில் அரச படையினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் உக்கிரமடைந்த நிலையில் உயிர் அபாயம் காரணமாக கிழக்குப் பல்கலைக்கழக முகாமில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் தஞ்சமடைந்திருந்தனர்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் ஆரம்பம் - செய்திகளின் தொகுப்பு
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் ஆரம்பம் - செய்திகளின் தொகுப்பு

இதன்போது படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 158 பேர் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாகவும், இந்த சம்பவம் இடம்பெற்று இரண்டு வாரங்களின் பின்னர் மீண்டும் ஒரு சுற்றிவளைப்பில் 18 பேர் கொண்டுசெல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை