ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு எதிர்வரும் ஒக்டோபர் 4ம் திகதி 5000 நாட்கள்!



ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு எதிர்வரும் ஒக்டோபர் 4ம் திகதி 5000 நாட்கள் கடக்கின்றது தனது கணவருக்காக போராடிவரும் மனைவியின் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்

அந்த பதிவில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இன்று 24ம் திகதி சரியாக இன்னும் 10 நாட்களில் அவர் கடத்தப்பட்டு 5000 நாட்கள் கடந்துள்ளன.

எனது கணவரை தேடியும் அவருக்கான நீதிய தேடியும் நானும் 5000 நாட்கள் போராடி வருகின்றேன்.

ஆகவே ஒக்டோபர் 4ம் திகதி பிரகீத் வாழ்த், சிரித்த பல செய்திகள் வெளியிட்ட பிரகீத் மூச்சு விட்ட அவரது இல்லத்தில் நீதி கோரிய ஒரு பாரிய வேலைத்திட்டதை முன்னெடுக்கு விரும்புகின்றேன்'

நான் உங்களிடம் விசேடமான உதவியை நாட விரும்புகின்றேன் பிரகீத்தையும் அவரது ஊடக செயற்ப்பாட்டை நேசித்தவர்கள், அதுபோன்று என்னை நேசித்தவர்கள் இந்த உரிமை சார்ந்த நிகழ்வை நடாதத்தா உதவி செய்யுமாறும் ஆதரவு வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.



 நாமும் கைகோர்ப்போம் ஊடகவியலாளர்களாக.
புதியது பழையவை