ஒரு தமிழ் நீதிபதி இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு உள்ளானால் - தமிழ் மக்கள் எந்த நிலையில் பாதிக்கப்படுகிறார்கள்



நீதிபதிப் பொறுப்புக்களில் இருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா  ஊடகங்களுக்கு கூறியுள்ளது.

குருந்தூர்மலை வழக்கில் நான் பிறப்பித்த உத்தரவுகளை திரும்பப்பெறுமாறு அரசு தரப்பில் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான @ReAdSarath மற்றும் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த மற்றவர்கள் எனது உயிருக்கு எதிராக நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் மிரட்டல் விடுத்துள்ளனர்.


உளவுத்துறை அதிகாரிகள் என்னை தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில், எனக்கு (நீதிபதிக்கு) அளிக்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு சமீபத்தில் குறைக்கப்பட்டது.

அட்டர்னி ஜெனரல் என்னை (நீதிபதியை) 21.09.2023 அன்று தனது அலுவலகத்தில் சந்திக்குமாறு அழைத்தார், மேலும் சந்திப்பின் போது குருந்தூர்மலை வழக்கில் நான் பிறப்பித்த உத்தரவுகளை திரும்பப்பெறும்படி வற்புறுத்தினார்.


மேலும், குருந்தூர்மலை வழக்கு தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தனிப்பட்ட முறையில் எனக்கு எதிராக இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த உத்தரவை வழங்கியதில் இருந்து எனக்கு ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல்கள், அழுத்தங்கள் மற்றும் துன்புறுத்தல்கள் காரணமாக எனது மிகவும் பிரியமான நீதித்துறை பதவிகளில் இருந்து நான் ராஜினாமா செய்ய நேரிட்டது.

மேலே கூறப்பட்டவை நான் பெற்ற அச்சுறுத்தல்கள், அழுத்தங்கள் மற்றும் துன்புறுத்தல்களுக்கு ஒரு சில உதாரணங்கள் மட்டுமே."

23-09-2023 அன்று பதிவுத் தபால் மூலம் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளருக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பியதாக அவர் கூறினார்.


இச்சம்பவம் இலங்கை சட்டத்தின் ஆட்சி நிலையை எடுத்துக் காட்டுகிறது.


ஒரு தமிழ் நீதிபதி இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு உள்ளானால், தமிழ் ஆர்வலர்கள் ஒருபுறம் இருக்க, தமிழ் மக்கள் எந்த நிலையில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை கற்பனை செய்து பார்க்க முடியும். என கூறியுள்ளார்.
புதியது பழையவை