கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (10-09-2023) மாலை சென்ற ரயில் வண்டியுடன் யானை ஒன்று மோதியதில் குறித்த யானை தளத்திலேயே உயிரிழந்துள்ளது.
மட்டக்களப்பில் கொழும்பிலிருந்து ஞாயிற்றுக்கிழமை 3 மணிக்கு புளத்திசிற்றி ரயில் மட்டக்களப்பை நோக்கி வந்து கொண்டிருந்த போது புனானை அசைலபுரம் பகுதியில் வைத்து குறித்த யானை ரயில் வண்டியின் முன்பகுதியில் மோதுண்டதையடுத்து ஸ்த்தளத்திலேயே உயிரிழந்துள்ளது.
யானை கூட்டம் ஒன்று ரயில் பாதையின் ஊடாக கடந்து சென்ற நிலையில் கடைசியாக சென்ற யானையே ரயில் வண்டியின் எஞ்சின் பகுதியில் மோதுண்டுள்ளது
பலத்த சேதத்திற்கு உள்ளான யானை அவ்விடத்திலேயே உயிரிழந்ததையடுத்து புகையிரத வண்டி பல மணி நேரங்கள் அவ்விடத்திலேயே தாமதமாக நின்றுள்ளது.
போலிஸார் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் குறித்த இடத்துக்கு விரைந்து உயிரிழந்த யானையை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அதிகாலை வேளை பலியான குறித்த யானை அகற்றப்பட்டதையடுத்து குறித்த ரயில் வண்டி அதிகாலை 3மணிக்கு மட்டக்களப்பை சென்றடைந்துள்ளது
குறித்த யானை மோதுண்டு பலியான சம்பவம் தொடர்பில் பொலிஸாரும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.