திருகோணமலையில் திலீபனின் உருவச்சிலை பாரவூர்தி மீதும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீதும் தாக்குதல் நடத்திய சந்தேகநபர்களுக்கு விளக்கமறியலை நீடிக்க திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த (17.09.2023) ஆம் திகதி திருகோணமலை கொழும்பு வீதியினூடாக திலீபனின் உருவச் சிலையை கொண்டு செல்லும்போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட 14 பேருக்கு தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில் இரு பெண்கள் உட்பட ஆறு சந்தேகநபர்களை (18.09.2023) திகதி சீனக்குடா பொலிஸார் கைது செய்து திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது (21.09.2023) ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் குறித்த வழக்கு இன்று திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது எதிர்வரும் அக்டோபர் மாதம் 05 ஆம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் கட்டளையிட்டுள்ளார்.