மோட்டார் சைக்கிள் விபத்து - பரிதாபமாக உயிரிழந்த சமுர்த்தி உத்தியோகத்தர்!



திருகோணமலை - வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் சமுர்த்தி உத்தியோகத்தரொருவர் உயிரிழந்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் (19-09-2023) மாலை பன்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.


குறித்த விபத்தில் கோமரங்கடவெல - கரக்கஹவெவ பகுதியைச் சேர்ந்த 53 வயதான அணில் சதுரசிங்க என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

சமுர்த்தி உத்தியோகத்தர் உயிரிழப்பு
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


கோமரங்கடவெல பிரதேச செயலகத்தில் சமுர்த்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் குறித்த நபர் திருகோணமலைக்கு வருகை தந்து வீட்டுக்கு செல்லும்போது பன்குளம் - 4ம் கண்டம் பகுதியில் வைத்து யானை வீதியை கடக்கும்போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக விசாரணைகளை மூலம் தெரிய வந்துள்ளது.

காயமடைந்த நபர் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.


இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை