மட்டு - போரதீவுபற்று பிரதேச செயலக பிரிவில் முன்னெடுக்கப்பட்ட வீதி அபிவிருத்தி தொடர்பிலான விசேட கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வீதி அபிவிருத்தி தொடர்பிலான விசேட கூட்டமானது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் தலைமையில் நேற்றைய தினம் (15-09-2023) போரதீவுபற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது அப் பிரதேச மக்களின் விவசாயம், மீன்பிடி மற்றும் அதனுடன் இணைந்ததாக சுயதொழிலினை
விருத்தி செய்து வாழ்வாதாரத்தினை உயர்த்தும் நோக்குடன் அப்பிரதேசத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வீதிகள் மற்றும் கிராமிய பாலங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

குறித்த நிகழ்வில் போரதீவுபற்று பிரதேச செயலாளர் ரங்கநாதன், RDA எந்திரி, உதவி திட்டமிடல் பணிப்பாளர் S.பிரபாகரன் , தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயற்குழு உறுப்பினர் பியதாஸ், பிரதேச குழு தலைவர் தயானந்தன் உட்பட பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.புதியது பழையவை