சூப்பர் மூன் என்ற சொல்லை இந்த ஆண்டு மக்கள் அதிகளவில் கேள்விப்பட்டிருப்போம் ஆம் சந்திரன் பூமிக்கு மிக அருகாமையில் தனது சுற்றுகையை நிகழ்த்துகின்ற போது முழுநிலவு அதன் சாமான்ய அளவை விட அளவில் பெரிதாகவும் அதிகளவு பிரகாசமாகவும் தென்படும் என்று வானியலாளர்கள் கூறுகின்றனர் இதனையே விஞ்ஞானிகள் சூப்பர் மூன் என்கிறார்கள் .
அந்த வகையில் இந்த ஆண்டு (2023) மொத்தமாக 4 சூப்பர் மூன்கள் தோன்றும் என எதிர்வுகூறப்பட்டது.
அதன்படி இந்த ஆண்டுக்கான இறுதி சூப்பர் மூன் நேற்றைய தினம் (28) ஆரம்பித்து இன்று அதிகாலை (29)மிகத்தெளிவாக தென்பட்டு, நிலவானது இன்று மாலையும் தனது பிரகாசமான ஒளியில் தோன்றும் என கூறப்படுகிறது.
இந்த சூப்பர்மூன் ஐ தவறவிட்டால் இனி அடுத்த ஆண்டு (2024) ஒக்டோபர் அல்லது நவம்பர் மாதம் வரை சூப்பர் மூன் ஐ பார்க்க முடியாது.
இந்த சூப்பர் மூன் "அறுவடை முழு நிலவு" என்று அழைக்கப்படுகிறது அதாவது விவசாயிகளின் பஞ்சாங்கத்தின்படி, வசந்த காலத்தில் விளைந்ததை அறுவடை செய்வதற்கான நேரம் செப்டம்பர் என்பதால், செப்டம்பர் மாத நிலவு முழு அறுவடை நிலவு என்று அழைக்கப்படுகிறது.
இது "சோள நிலவு" என்றும் "பார்லி நிலவு" என்றும் விவசாயிகளால் அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் வரும் இந்த அறுவடை முழு நிலவு இந்த ஆண்டு சூப்பர் மூன் ஆக தோன்றியிருக்கிறது.
இந்த சூப்பர் மூன் இன்று (29 -09-2023) காலை 5:57 மணிக்கு வானில் பிரகாசமாக தோன்றியிருந்தது. இது மீண்டும் இன்று (29) மாலை தோன்றும், அதாவது இந்த ஆண்டின் இறுதி சூப்பர் மூனை 2 தடவைகள் பார்க்கக்கூடிய அரிய வாய்ப்பு கிட்டியுள்ளது.
இந்த ஆண்டு (2023) சூப்பர் மூன்களை பார்க்கும் அதிர்ஷ்டசாலிகளாக நாம் இருந்தாலும், இதன் பின்னர் நாம் வறண்ட காலநிலையை அனுபவிக்கப்போகும் துரதிஷ்டசாலிகள் ஆகப்போவது நிதர்சனம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.