மக்களின் நம்பிக்கையை இழந்தது நீதித்துறை - யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்!முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா பதவி விலகியமையால் மக்களின் நம்பிக்கையை நீதித்துறை இழந்துள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகல் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நீதிபதி ரி.சரவணராஜா தொடர் அழுத்தங்கள் காரணமாக பதவியிலிருந்து விலகி நாட்டைவிட்டு வெளியேறியமை இலங்கை நீதித்துறையின் சுயாதீனத்தன்மை மீது விழுந்த மற்றுமொரு கரும்புள்ளியாகும்.

இச் சம்பவம் நீதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் கேள்வியினை தோற்றுவித்துள்ளதோடு, நீதிமன்றச் செயற்பாடுகளில் அரசியல் மற்றும் புற காரணிகளின் அழுத்தம் தொடர்ந்தும் பிரயோகிக்கப்படுகின்றமையினையும் உறுதிசெய்கின்றது.

தமிழ் மக்கள் உள்ளக விசாரணையையும் நீதிப் பொறிமுறையையும் நம்பமுடியாது என்பதை இது உறுதி செய்கின்றது.

இனப்படுகொலைக்கான சர்வதேச நீதிக்கு இது மேலும் வலுச்சேர்க்கின்றது.

நீதிபதி ரி.சரவணராஜாவிற்குரிய நீதியை வழங்க, நீதித்துறையில் சுயாதீனத்தன்மையினையும் நம்பகத்தைன்மையையும் உறுதி செய்ய வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
புதியது பழையவை