தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
இந்த நினைவேந்தல் நிகழ்வானது இன்று(26 -09-2023)பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் இன்று நடைபெற்றது.
கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் இனத்தின் விடுதலைக்காக தியாக தீபமாக மாறிய திலீபனின் அசைபோடும் நினைவுகள்!
மலர் தூவி அஞ்சலி
இதில் பெருமளவிலான மாணவர்கள் கலந்துகொண்டு தியாக தீபம் திலீபனின் நினைவாகச் சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி உணர்வெழுச்சியோடு அஞ்சலி செலுத்தினர்.