மட்டக்களப்பு பெரியபோரதீவில் - குடும்பஸ்தர் காயங்களுடன் சடலமாக மீட்பு!மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய போரதீவு பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (14.09.2023) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொதுச்சந்தை வீதி, பட்டாபுரம் பெரியபோரதீவு பிரதேசத்தை சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான தங்கராசா திசவீரசிங்கம் (51) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலத்தில் இரத்தக்காயங்கள்
பல காலங்களாக மனைவி பிள்ளைகளை வீட்டு தனிமையில் தனது சகோதரியின் வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மரணமானவரின் உறவினர் ஒருவர் நேற்று காலை குறித்த நபர் இருந்த வீட்டுக்கு சென்றபோது மரணமடைந்த நிலையில் காணப்பட்டதனையடுத்து களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்ட போது, சடலத்தில் இரத்தக்காயங்கள் காணப்பட்டதனையடுத்து சம்பவம் தொடர்பில் நீதிமன்ற நீதிவான் ஜே.வி.ஏ.ரஞ்சித்குமாரின் கவனத்திற்கு தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த நீதிவான் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனையின் பின்னர் அறிக்கையினை மன்றுக்கு சமர்ப்பிற்கும் படி திடீர் மரண விசாணை அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை