விடுதலைப் புலிகளைக் குறிக்கும் நிறங்கள் பயன்பாடு!சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளைக் குறிக்கும் என்றால் சிறிலங்கா தேசியக் கொடியின் நிறங்களை மாற்றுங்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை அவர் தனது முகப்புத்தக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தியாக தீபம் திலீபனின் 36 ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு கிழக்கில் இருந்து வடக்கிற்கு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.


இனவெறி காடையர்களின் தாக்குதல்
இதற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சில இனவெறி காடையர்கள் பேரணியில் கலந்து கொண்ட தமிழர்கள் சிலரை தாக்கியதோடு திலீபனின் உருவப்படத்தையும் சேதப்படுத்தினர்.

இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் பேசப்பட்டபோது, சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளைக் குறிக்கும் நிறம் என்பதால் தான் கோபமடைந்த சிங்கள மக்கள் இந்த தாக்குதலை மேற்கோண்டதாக சில கருத்துக்கள் எழுந்தன.


மையப் புள்ளியாகும் இலங்கை: இரகசிய கண்காணிப்பில் ஈடுபட்ட சீன கப்பல்! இந்தியாவை சீண்டுகிறதா சீனா
மையப் புள்ளியாகும் இலங்கை: இரகசிய கண்காணிப்பில் ஈடுபட்ட சீன கப்பல்! இந்தியாவை சீண்டுகிறதா சீனா
இந்த நிலையில், சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளைக் குறிக்கும் என்றால் சிறிலங்கா தேசியக் கொடியில் உள்ள நிறங்களை மாற்றுங்கள் என கனகரத்தினம் சுகாஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்த பதிவு தொடர்பில் பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், பௌத்த பிக்குகளின் காவி உடையும் ஒரு வித மஞ்சள் நிறமெனவும் பௌத்த கொடியிலும் குறித்த நிறங்கள் இருப்பதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை