2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரவு செலவுத் திட்டத்தின் போதான வாக்களிப்பினை புறக்கணிக்குமாறு கருணா குழுவினர் தன்னை அச்சுறுத்தி மட்டக்களப்பு பிரபல பெண்கள் பாடசாலை மாணவியான தனது மகளை கடத்த முயற்சித்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த அச்சுறுத்தலினையும் மீறி தான் தொடர்ந்து வரவு செலவுத்திட்டத்தின் முதலாவது வாக்கெடுப்பில் கலந்துகொண்டமையினால் அரசாங்க உத்தியோகத்தரான தனது சகோதரனை கடத்தி மட்டக்களப்பில் மறைத்துவைத்து தன்னை அச்சுறுத்தியமையினால் குடும்பத்தினரின் அழுத்தத்தினால் இரண்டாவது வாக்கெடுப்பினை புறக்கணித்ததாகவும் கூறியுள்ளார்.
எனவே இவ்வாறான சம்பவங்களை கருணா குழுவினர் மேற்கொண்டதினை தான் நேரடியாக அறிந்தவர் என்றும் தெரிவித்துள்ளார்.