14 வயது பாடசாலை மாணவி ஒருவர் ஆசிரிய ஆலோசகரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டாக நாரம்மல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாலியல் வன்புணர்விற்கு உள்ளானதாக கூறப்படும் மாணவியிடம் வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் குறித்த ஆசிரிய ஆலோசகர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவி மருத்துவப் பரிசோதனை
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிராந்திய கல்வி அலுவலகத்தில் ஆசிரிய ஆலோசகராக பணிபுரியும் நாற்பத்தைந்து வயதுடைய திருமணமானவர் என தெரிவிக்கப்படுகிறது.
பாலியல் வன்புணர்விற்கு ஆளான மாணவி மருத்துவப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் தொடர்பில் நாரம்மல பொலிஸார் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.