கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவனமும் இணைந்து நடாத்தும் கிழக்கின் ஓவியத்திருவிழா
சிறப்பாக இடம்பெற்று வருகிறது.
ஓவியத் திருவிழா 3 நாட்கள் இடம்பெறும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது.
ஓவியத் திருவிழாவின் ஆரம்ப நிகழ்வு நேற்றைய தினம் மட்டக்களப்பு காந்திபூங்காவில் இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன், சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கைகள் நிறுவகத்தின்
பணிப்பாளர் பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கென்னடி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
பல்கலைக்கழக பேராசிரியர்கள், சிரேஸ்ட விரிவுரையாளர்கள், மாவட்ட செயலக கலாசார உத்தியோகத்தர் ரீ.மலர்செல்வன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.