அனுராதபுரத்தில் இரவு நேரம் நடந்தது என்ன!



அனுராதபுரம், பலகல பிரதேச செயலகப் பிரிவு, ஹிகுரு வேவ களுஆராச்சியாகம பகுதியில் கடந்த 20ஆம் திகதி இரவு பல வீடுகளில் நிலநடுக்கம் போன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த பகுதியில் உள்ள பல வீடுகளுக்கு பகலில் மட்டுமின்றி இரவிலும் இந்த சத்தம் கேட்டதாகவும், களுஆராச்சியாகமவில் உள்ள ரஞ்சித் விமலசேன தெரிவித்துள்ளார்.

மேற்கூரையில் பலத்த சத்தம்
அத்துடன் வீட்டின் மாடியில் பொருத்தப்பட்டிருந்த ஓடுகள் அனைத்தும் தூக்கி வீசப்பட்டு வெடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரவு 10.30 மணியளவில் தனது வீட்டின் மேற்கூரையில் பலத்த சத்தம் கேட்டு மனைவியுடன் தேடியபோது எதையும் காணாத நிலையில் மீண்டும் வீட்டுக்குள் வந்து பார்த்த போது மாற்றம் ஏற்பட்டிருந்ததை அவதானித்ததாக குறிப்பிட்டுள்ளார்.


அன்று மதியம் இந்த வீட்டின் அருகில் உள்ள மற்றொரு வீட்டின் கூரையிலிருந்து சத்தம் கேட்டதாக அந்த வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

மற்றொரு வீட்டில் பெரும் சத்தம்
எவ்வாறாயினும், அன்றைய தினம் இரவு 10.30 மணியளவில் சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள மற்றொரு வீட்டில் பெரும் சத்தம் கேட்டதாக பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பில் கல்கிரியாகம காவல்துறையினருக்கும், பலகல பிரதேச செயலகத்திற்கும் அறிவிக்கப்பட்டதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

பிள்ளையான் திருந்திவிட்டாராம் : சான்று பகர்கிறது அரசாங்கம்
பிள்ளையான் திருந்திவிட்டாராம் : சான்று பகர்கிறது அரசாங்கம்

கண்டுபிடிக்க முடியவில்லை
இதுவரை என்ன நடந்தது என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், இது குறித்து அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதியது பழையவை