இவர் முறிந்த பனை என்கிற நூலின் ஆசிரியரும் கூட….
புலிகள் இயக்கத்தின் மீது குற்றஞ்சாட்டப்பட்ட படுகொலைகளில் இதுவும் ஒன்று….
பத்து ஆண்டுகளுக்கு மேலாக எல்லோரும் அப்படித் தான் நினைத்துக் கொண்டிருந்தனர்….
புலிகள் மறுப்பு அறிக்கை விட்டும் ஒருவரும் ஏற்கவில்லை.
ஆனால், பல ஆண்டுகளுக்கு பிறகு - இந்திய இராணுவம் மற்றும் அதனோடு இணைந்து செயற்பட்ட இராணுவ துணைக் குழுக்களின் தமிழர்கள் மீதான படுகொலைகளை எதிர்த்தும் எழுதியும் வந்தபடியால்
- இந்திய இராணுவ கேர்ணல் ஒருவரின் அறிவுறுத்தலின்படி அந்த படுகொலையை செய்தது EPDP (அப்போதைய EPRLF எண்டு நினைக்கிறேன்) டக்ளஸ் தேவானந்தா என EPDPஇனால் வெளியிடப்பட்ட தினமுரசு பத்திரிகை ஆசிரியர் அற்புதன் அந்தப் பத்திரிகையிலேயே எழுதிவிட்டார்.
அதற்கு மறுப்பு தெரிவித்து எழுதும்படி அந்த கட்சி தலைமையாலே கடுமையாக வற்புறுத்தப்பட்டும் அதை செய்ய மறுத்தபடியால் அவரும் (EPDPஐ சேர்ந்த) இனந்தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.