மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழுக்கூட்டம்



மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழுக்கூட்டம், மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில்(13-09-2023) ஆம் திகதி
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

விவசாயிகளுக்கான வங்கி கடன் உதவி திட்டம், விவசாயத்திற்காக நீர்ப்பாசனம் மற்றும் கமநல அபிவிருத்தி, சிறு போக பயிர் செய்கையின் முன்னேற்ற அறிக்கை, விவசாயிகளுக்காக வழங்கப்படும் உரம், விவசாயிகளுக்கான நட்ட ஈடு கொடுப்பனவு போன்ற
பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.


மாவட்ட விவசாய குழு கூட்டத்தில் பிரதேச செயலாளர்கள், விவசாயம், நீர்ப்பாசனம், கமநல அபிவிருத்தி திணைக்களங்களின் அதிகாரிகள், மாவட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
புதியது பழையவை