மட்டக்களப்பு பண்ணையாளர்களும் ,கால்நடைகளும் எதிர்நோக்கும் அநீதிக்கு எதிரான அறவழிப் போராட்டம்!
பண்ணையாளர்களும், கால்நடைகளும் எதிர்நோக்கும் அநீதிக்கு எதிரான அறவழிப் போராட்டத்தின் இரண்டாவது நாள் இன்று (16-09-2023)இடம்பெற்றது


மட்டக்களப்பு செங்கலடி மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் மயிலத்தமடு, பெரியமாதவனை பண்ணையாளர்களும், கால்நடைகளும் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் அநீதிக்கு எதிரான அறவழிப் போராட்டம் இரண்டாவது நாளாக சித்தாண்டியில் இடம்பெற்றது.

இன்று காலை சித்தாண்டி பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள கூடாரத்தில் ஒன்று கூடியவர்கள் தங்களுக்கு எதிராக இளைக்கப்படும் அநீதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறும் பதாதைகளை தாங்கயவாறும் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
தங்களுக்கு நீதி கிடைக்கும் வரை இவ் போராட்டமானது சுழற்சியான முறையில் இடம்பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


இன்றைய போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் முன்னாள் பராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,ஞா.சிறிநேசன,; சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பவானந்தன் என பலரும் கலந்து கொண்டனர்.


புதியது பழையவை