மட்டக்களப்பு மாவட்டத்தில் 10218 பேர் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றியுள்ளனஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று (15-10-2023)நாடெங்கிலும் நடைபெற்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் இன்றைய தினம் பரீட்சை ஆரம்பமாகியுள்ளது.

இன்று காலை ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தோற்றும் மாணவர்கள் ஆலயங்களில் வழிபாடுகளை மேற்கொண்டு பரீட்சை நிலையங்களுக்கு சென்றதை காணமுடிந்தது.மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட திருப்பழுகாமத்தில் மகா விஸ்ணு ஆலயத்தில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு விசேட வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு ஆசிர்வாதமும் வழங்கப்பட்டது.

போரதீவுப்பற்று கோட்டத்தில் உள்ள மட்/பட்/திருப்பழுகாமம் விபுலானந்தா வித்தியால மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பரீட்சைக்கு தோற்றியதை காணமுடிந்தது.
இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் 10218 மாணவர்கள் புலமைபரிசில் பரீட்சைக்கு தோற்றுவதுடன் கிழக்கு மாகாணத்திலிருந்து 30820 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

இதில் 6747 சிங்கள மொழி மாணவர்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


புதியது பழையவை