அம்பாறை சம்மாந்துறைப் பிரதேசத்தில் நெய்னாகாடு, வம்பியடி எனும் இடத்தில் நேற்றிரவு (03 -10-2023) காட்டு யானை தாக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
இறக்காமம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட இறக்காமம் 9ம் பிரிவைச்சேர்ந்த புஹாரி சரீப் சிபானி (றிபானி) 43 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயொருவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.