தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு!



தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நேற்று நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை செய்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தடையை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இம்முறை பரீட்சை 2,888 நிலையங்களில் நடைபெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
புதியது பழையவை