மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது குழந்தைகள் பராமரிப்பு நிலையமாக சென் மேரிஸ் குழந்தைகள் பராமரிப்பகத்தின் அங்குராப்பன நிகழ்வு திருமதி ராஜினி பிரான்சிஸ் தலைமையில் சார்ள்ஸ் மண்டபத்தில் நேற்று (22 -10-2023)ஆம் திகதி மாலை இடம் பெற்றது.
உலக வங்கியின் நிதி அனுசரணையில் சர்வோதயா நிறுவனத்தின் கண்காணிப்பின் கீழ் இப் பராமரிப்பு நிலையம் மிகச்சிறப்பாக செயற்படவுள்ளது.
இந் நிகழ்விற்கு அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவித்த குழந்தை நல வைத்திய நிபுணர் சோனியா நவரத்தினம் குழந்தைகளுக்கு தேவையான பராமரிப்பு மற்றும் குழந்தைகள் விளையாட்டுகள் மூலம் தொடர்பாடலை விருத்தி செய்வதனால் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த முடிவதோடு ஆரோக்கியமான பிரஜைகளாக உருவாக்க முடியும் என தெரிவித்தார்.
வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பராமரிப்பதற்காக பராமரிப்பாளர்களைத் தேட வேண்டிய நிலையில், நன்கு பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பராமரிப்பாளர்களைக் கொண்டு இப்
பராமரிப்பு நிலையம் தமது சேவையினை வழங்கவுள்ளது.
சர்வதேச நிதி நிறுவனம், சர்வோதயா நிறுவனம் மற்றும் கொமர்சியல் வங்கியினரும் தமது ஆதரவினை இச்செயற்றிட்டத்திற்கு வழங்கியுள்ளனர்.
இந் நிகழ்வில் சர்வதேச நிதி நிறுவன திட்ட இணைப்பாளர் வேனுஸ்ரீ உள்ளிட்ட ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.