ஒவ்வாமை பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!பண்டாரவளையில் உணவு ஒவ்வாமை காரணமாக பாடசாலையொன்றில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டாரவளை – தூல்கொல்ல பிரதேசத்திலுள்ள பாடசாலை மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அம் மாணவர்கள் பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலையில் இன்று காலை வழங்கப்பட்ட உணவு விஷமடைந்ததன் காரணமாக அம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதியது பழையவை