தந்தை மற்றும் மகள் மீது வீதியில் நின்ற ஒருவர் ஆசிட் தாக்குதல்



முல்லேரியா, அம்பத்தலே பிரதேசத்தில் இன்று (11-10-2023) காலை தந்தை ஒருவரும் அவரது மகளும் அசிட் வீச்சுக்கு இலக்காகியுள்ளனர்.

தந்தை-மகள் இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது அசிட் வீச்சு நடத்தப்பட்டுள்ளது.

வீதியில் நின்ற ஒருவரால் இந்த ஆசிட் வீச்சு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

படுகாயமடைந்த தந்தை கொழும்பு கண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, மகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
புதியது பழையவை