இன்று முதல் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, 18 சதவீதத்தால் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
மின்சாரக் கட்டணத்தைப் பயன்படுத்தும் அலகுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம் எவ்வாறு அதிகரிக்கப்படும் என்பது இன்று பிற்பகல் வேளையில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரக் கட்டணங்களின் சதவீத அதிகரிப்பு தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.