வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் - சூறாவளி குறித்து எச்சரிக்கை!வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் எதிர்வரும் 12 மணித்தியாலங்களுக்குள் சூறாவளியாக மாற்றமடைந்து, கிழக்கு ஈசான மூலைப் பகுதியில் பயணிக்கலாமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த தாழமுக்கம் எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் சூறாவளியாக மாறி, பங்களாதேஷ் கடற்பகுதியை நோக்கி பயணிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் இதனால் இடியுடன் கூடிய மழை மற்றும் பாரிய அலைகள் உருவாகக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை கடும் காற்று மற்றும் கடல் பிரதேசங்களில் பெரும் அலைகள் காணப்படுவதால் அவதானமாக செயற்படுமாறு கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய – மேற்கு வங்காள விரிகுடா கடற்பிரதேசத்தில் பயணிக்கும் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் அவதானத்துடன் செயற்படவேண்டுமென்றும் அந்நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த வகையில் வடக்கு, மேற்கு கடற்பகுதிகளில் 40-45 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசலாம் என்றும் அந்தக் கடற்பகுதியில் கடும் காற்று, இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை