இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரும் தமிழ் தேசிய பற்றாளரும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பொன்.செல்வராஜா அவர்கள் இன்று(13-10-2023) காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பேரியகல்லாறை பிறப்பிடமாக கொண்ட அவர் தமிழ் தேசிய அரசியலில் மிக முக்கிய இடத்தினை வகித்துவந்தார்.குறிப்பாக இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஸ்ட உபதலைவராகயிருந்து கிழக்கு மாகாணத்தில் தமிழரசுக்கட்சிக்கு பலமாக இருந்தவராக கருதப்படுகின்றார்.
இறுதி கிரியைகள் தொடர்பான விபரங்கள் இதுவரையில் கிடைக்கவில்லை.