எதிர்வரும் பெரும்போகத்திற்கு தேவையான 21,000 மெற்றிக் தொன் யூரியா உரத்தை இன்று முதல் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கருத்துத் தெரிவிக்கையில்,
உரமூடையொன்று 9 ஆயிரம் ரூபாய்
இந்த விடயம் தொடர்பில் அரசாங்க உர நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, லங்கா உர நிறுவனமும் கொழும்பு வர்த்தக உர நிறுவனமும் விநியோகப் பணிகளை மேற்கொள்ளவுள்ளன.
இதன்படி 50 கிலோகிராம் யூரியா உரமூடையொன்று 9 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
அதுமட்டுமல்லாது நெல் பயிரிடும் ஒவ்வொரு விவசாயிக்கும் உர கொள்வனவுக்காக ஒரு ஹெக்டயருக்கு 15,000 ரூபாயை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.