இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை இல்லையேல் நாடு பிளவுபடும் - கோ.கருணாகரம் எச்சரிக்கை



நாட்டில் இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான தீர்வைக் காணாவிடின் இந்த நாடு எதிர்காலத்திலே பிரிவதற்கான சாத்தியக் கூறுகள் தான் இருக்கின்றதென்பதையும், தமிழ் மக்கள் மத்தியில் தனிநாடு, தமிழீழம் என்ற நினைப்பு விலகாமல் இருப்பதற்கு நீங்கள் தான் காரணம் என்பதை இந்த சிங்களப் பெரும்பான்மைக் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று (13.10.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


தமிழீழக் கனவு அழியவில்லை
 (12.10.2023) ஆம் திகதி முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர இலங்கையிலே தமிழீழ விடுதலைப் புலிகள் அழிந்தாலும் அவர்களின் தமிழீழக் கனவு அழியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

எங்களது ஆயுதப் போராட்டம் 2009ல் மௌனிக்கப்பட்டிருந்தாலும் அதற்கு முன் தமிழீழம் தான் தமிழர்களின் ஒரே இலக்கு என்று பயணித்துக் கொண்டிருந்த நிலைமை தற்போது இன்னும் வீரியம் அடையக் கூடிய விதத்திலே மக்களின் மனநிலை இருக்கின்றது.

சர்வதேசத்தின் உதவியுடன் 2009ல் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த அரசு தமிழர்களின் இனப்பிரச்சனை தொடர்பில் அவர்களின் அபிலாசைகள் நிறைவேறும் அளவிற்கு 13வது திருத்தச் சட்டத்திற்கு மேலாக பிளஸ் நடைமுறைப்படுத்தி தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்போம் என்று சர்வதேசத்திற்குக் கூறியது என குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை