மட்டக்களப்பு பண்ணையாளர்களுக்கு தீர்வினை வழங்குவதாக ஜனாதிபதி தெரிவிப்பு!



மட்டக்களப்பு மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்களுக்கு உடனடியாக தீர்வினை வழங்குவதாக ஜனாதிபதி சுமந்திரனிடம் தெரிவித்துள்ளாதாக பா.ம.உ சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மேலும் தெரிவிக்கையில்,


கடந்த சில தினங்களுக்கு முன்னதாக பண்ணையாளர்களுடன் தீர்மானித்ததின் அடிப்படையில் ஜனாதிபதிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சாணக்கியனுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனாலும் வெளிநாட்டில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவரது விமானம் தாமதமானதால் அவரால் குறித்த கலந்துரையாடலுக்கு கலந்து கொள்ள முடியவில்லை இருந்தாலும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கலந்துகொண்டுள்ளார்.

இன்று ஜனாதிபதியை சந்தித்த சுமந்திரன் கடந்த 20 தினங்களாக வீதி ஓரமாக இருக்கும் பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

ஜனாதிபதி தனது செயலாளர் ஏக்கநாயக்காவிடம் குறித்த பிரச்சனை தொடர்பாக உடன் கவனம் எடுக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து ஜனாதிபதியின் செயலாளர் ஐ ஜி பி க்கு குறித்த பண்ணையாளர்கள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரியும் அத்துமீறிய குடியேற்றவாசிகளை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடம் தெரிவித்துள்ளதாக இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறாக இருந்தாலும் ஓரிரு தினங்களில் ஜனாதிபதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வர இருப்பதினால் பண்ணையாளர்களின் கோரிக்கையான தங்களது நில மீட்பு அத்துமீறிய குடியேற்றங்கள் அகற்ற ப்பட்டால் தாங்கள் போராட்டத்தை கைவிடுவதாக கூறியுள்ளனர்.

ஆகவே ஜனாதிபதியின் கருத்துக்கு அமைவாக எதிர்காலத்தில் குறித்த விடயம் எந்த அளவு சாத்தியப்படுமோ அதற்கு ஏற்றாப்போல் மேலதிக நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை