இன்று தமிழரின் புனித நாள் ♨️கார்திகை 27…‼️




காரிலுள் சூழ்ந்த மண்ணில்..!
போரிட்டு ஒளியை தந்தீர்..!
பொல்லாங்கு சூழ்ச்சியாலே..!
புதையுண்டு விதைகள் ஆனீர்..!

வல்லவர் நீங்கள் அன்றோ..!
வதைகளை உடைத்தீர் அல்லோ..!
படைகளின் தடைகள் கண்டே..!
விடைகளை கொடுத்தீர் முன்னே..!

நடைதனில் புனிதர் நீங்கள்..!
நாட்டுக்கே வீரம் சொன்னீர்..!
விடுதலை உணர்வு கொண்டீர்..!
வேங்கையாய் பாய்ந்து வென்றீர்..!

பகைவரை எதிர்த்து நின்றீர்…!
பற்றுடன் தியாகம் செய்தீர்..!
பரம்பரை மண்ணை மீட்க..!
உரிமைக்காய் உயிரை விட்டீர்..!

காலத்தால் அழியா தெய்வம்..!
கை கூப்பி வணக்கம் சொல்லும்..!
கல்லறைகள் தியாகம் கண்டோம்.!
கார்திகை 27,ல் தீபம் இட்டோம்..!

அம்பிளாந்துறையூர் அரியம்

புதியது பழையவை