வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று மாவீரர் நினைவேந்தல்!தமிழ் மக்களின் உரிமைக்காக போராடி தமது இன்னுயிர்களை ஈகை செய்த வீரமறவர்களை உணர்வெழுச்சியுடன் நினைவேந்தும் மாவீரர் நாள் இன்றாகும்.

அந்த வகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாவீரர் தின நிகழ்வுகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளன.
இன்று (27-11-2023)மாலை 6.05 மணிக்கு ஆலயங்களில் மணியோசை எழுப்பப்பட துயிலும் இல்லங்கள், வீடுகள், பொது இடங்களில் சமநேரத்தில் சுடர் ஏற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை