மட்டக்களப்பு மாவட்டத்தில் 5ம் தர புலமைப் பரிசில் பரிட்சையில் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களை கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் பெற்றுள்ளனர்மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரிட்சையில் மாவட்ட மட்டத்தில் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களை பெற்றுள்ளனர்.

ரஜினிகாந்த் ரித்திகா சமி என்ற மாணவி 189 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மாவட்டத்தில் முதல் இடத்தினையும், வேலாயுதம் கேஷாலினி என்ற மாணவி 186 புள்ளிகளை பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.


மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்யாலயத்தில் இருந்து பரீட்சைக்கு தோற்றிய 141 மாணவர்களில், 138 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதுடன் 57 மாணவர்கள் வெட்டு புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தி அடைந்துள்ளனர்.


மாவட்ட மட்டத்தில் முதலாம் இரண்டாம் இடங்களை பெற்றுக் கொண்ட மாணவர்களிள் இரட்டை சகோதரர்களும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை