மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க கோரிய மனுவை - சட்டத்தரணி இன்றியே நீதாவானே தள்ளுபடி செய்தார்..!



மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க கோரிய மனுவை பருத்தித்துறை நீதவான் நீதிமன்று தள்ளுபடி செய்துள்ளது.

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை பொலிஸாரினால், தமது பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை விதிக்க கோரி பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த தடைமனுவை பார்த்துவிட்டே எந்த சட்டத்தரணியும் ஆட்சேபனை தெரிவிக்காதபோதும் நீதிபதியே இந்த ஆட்சேபனை மனுக்களை நேற்று(17/11/2023) நிராகரித்து தள்ளுபடி செய்தார்.!
புதியது பழையவை