மட்டக்களப்பில் போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேர் கைது!மட்டக்களப்பில் போராட்டத்தில் ஈடுபட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்திவெளி பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவணை பண்ணையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பாரிய போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.


போராட்டம் முடிந்து திரும்பும் நிலையில், பல்கலைக்கழக மாணவர்களின் பேருந்து சந்திவெளியில் பொலிசாரால் இடைமறிக்கப்பட்டு, மாணவர்களிடத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் 4 பேரும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதியது பழையவை