மட்டக்களப்பு ஆரையம்பதியில் - பாம்பு தீண்டி உயிரிழந்த 6 மாத குழந்தைமழைகாலத்தில் விஷயந்துக்கள் வீடுகளுக்குள் தஞ்சமடையலாம் அவதானமாக செயற்படுவோம்

மட்டக்களப்பு ஆரையம்பதி பாத்திமாபுரம் பகுதியில் பாம்பு கடித்ததில் ஆறு மாத குழந்தை உயிரிழந்த சோக சம்பவம் ஒன்று நடந்துள்ளது .

இன்று (24-11-2023)அதிகாலை 3 மணியளவில் குழந்தை அழுது கொண்டிருந்ததையடுத்து தாயாருக்கு பாம்பு கடித்தது தெரியாதிருந்த நிலையில் குழந்தைக்கு ஓம வாட்டர் கொடுத்து உறங்க வைத்துள்ளார்.

காலை 7 மணியளவில் குழந்தை எழும்பாதிருந்த நிலையில், கையில் இரண்டு இடத்தில் பாம்பு தீண்டிய காயங்களை கண்டுள்ளார் , குழந்தையின் உடல் குளிர்ந்த நிலையில் இருந்ததை உணர்ந்தவுடன் உடனடியாக குழந்தையை ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதையடுத்து குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இக்னேசியஸ் அபிலாஷ் என்ற ஆறு மாத குழந்தையே இவ்வாறு பாம்பு கடித்ததில் குழந்தை உயிரிழந்துள்ளது.

மேலும் பிரேத பரிசோதனைக்காக குழந்தையின் உடல் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை