எரிபொருள் விலையில் திருத்தம்



இலங்கையில் நேற்று (31-10-2023) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் புதிய விலை 356 ரூபாவாக அமைந்துள்ளது.


ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 423 ரூபாவாக அமைந்துள்ளதென இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.


பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்ட அறிக்கையின் படி,

இதன்படி, டீசல் ஒரு லிட்டரின் விலையும் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 351 ரூபாவாக காணப்பட்ட ஒரு லிட்டர் டீசலின் விலை 356 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசல் ஒரு லிட்டரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, சுப்பர் டீசலின் புதிய விலை 431 ரூபாவாகும். மண்ணெண்ணெய் ஒரு லிட்டரின் விலையும் 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 242 ரூபாவாகக் காணப்பட்ட ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை 249 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை